வெளியான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்! பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக அனுமதி
பல்கலைக்கழக அனுமதி குறித்த மேலதிக விபரங்களை மாணவர்கள் நாளை நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் தகைமையைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 31 ஆம் திகதி நள்ளிரவு வெளியான இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், 176,527 மாணவர்கள், அதாவது 62.64%, பல்கலைக்கழக சேர்க்கைகளைப் பெற்றுள்ளனர்.
111 பெறுபேறுகள் இடைநிறுத்தம்
111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 30,000-க்கும் அதிகமானோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
இதற்கிடையில்பாடசாலை மட்டத்தில் 7,477 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியையும், தனியார் பரீட்சார்த்திகளில் 823 பேர் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுள்ளனர்.
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam