கோவிட் தொற்றால் தொழில்களை இழந்தவர்களுக்கான ஓர் அறிவித்தல்
கோவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாது போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கோவிட் அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் பிரிவுகளில் தொழில் புரிந்தவர்கள் தொடர்பான தகவல்களை தொழிலாளர் திணைக்களத்துக்கு வழங்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் இலங்கையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை பெற்று, அதன் மூலமாக முடியுமான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதே பிரதான நோக்கமாகும். அதற்காகவே இந்த தகவல்களையும் தரவுகளையும் பெறவுள்ளோம் என தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழில்களை இழந்தோர் தமது பெயர், முகவரி, தொலைப்பேசி எண், தொழில் புரிந்த நிறுவனத்தின் முகவரி, சேவையிலிருந்து நீக்கிய திகதி, சேவைக்காலம் மற்றும் கடைசியாக பெற்றுக்கொண்ட அடிப்படை சம்பளம் ஆகிய விபரங்களை தொழிலாளர் திணைக்கள பணிப்பாளர் (தொழிற்துறை விவகாரப் பிரிவு) 11 ஆம் மாடி, ‘மெஹெவர பியச’ கொழும்பு – 05 எனும் முகவரிக்கு அல்லது irlabur456@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு தொழிலாளர் திணைக்கள பணிப்பாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 0112 368502 எனும் தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri