சீனாவின் விமான போக்குவரத்து பாதையில் புதிய மாற்றம்: எச்சரிக்கை விடுத்த தாய்வான்
சீனா விமான போக்குவரத்து பாதையை மாற்றியமைத்ததற்கு தாய்வான் கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா அண்மையில் தங்களுடைய விமான பாதையில் சிறிது மாற்றத்தை அறிவித்தது, அதன்படி தெற்கு நோக்கி செல்லும் விமானங்கள் M503 பாதையில் இன்று(01.02.2024) முதல் பயணிக்கும் என அறிவித்துள்ளது.
சீனாவின் அறிவிப்பு
மேலும் இந்த மாற்றத்தின் மூலமாக பரபரப்பான இடங்களுக்கான விமான போக்குவரத்து செயல்திறன் அதிகரிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா-தாய்வான் இடையே ஏற்கனவே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இந்த விமான போக்குவரத்து பாதை மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்தை பாதையை மாற்றும் சீனாவின் அறிவிப்புக்கு தாய்வான் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
இது பற்றி தாய்வான் இராணுவ அமைச்சர் தெரிவித்த கருத்தில், இந்த மாற்றம் ஒருதலைபட்சமானது மற்றும் தன்னிச்சையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாற்றமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |