விவசாயிகளுக்கான புதியதொரு வேலைத்திட்டம்: மட்டக்களப்பில் முன்னெடுப்பு
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யும் வழிகாட்டல் தேசிய வேலைத்திட்டம் நாட்டில் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வேலைத்திட்டமானது, 03.02.2026 தொடக்கம் 17.02.2026 வரை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேலைத்திட்டம்
அந்த வகையில், மட்டக்களப்பு - வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் தவணை கமநல அமைப்பு வயற்கண்ட விவசாயிகளை Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் நேற்று(06.02.2026) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் தலைமையில் சந்திவெளி புதுப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, சுமார் 250 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கான நிகழ்நிலை பதிவுகளை பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயம் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், தவணை கமநல அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.



