கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட.. இன்றுவரை தொடரும் மர்மம்
சுயாதீன ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda), 2010 ஆண்டு ஜனவரியில் கிரித்தலே, ஹபரணை மற்றும் கொட்டாவ பகுதியில் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவருடைய மனைவி சந்தியா எக்னெலிகொட, கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக நீதிக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
பிரகீத் எக்னெலிகொட, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சக்களை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயற்பட்ட போது, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி உட்பட ஒன்பது இராணுவ புலனாய்வுப் பிரிவினர், இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டதுடன்,உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல்போன விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கர்னல் எராந்த ரதீஷ் பேரிஸ், பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டமைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
இந்த விடயம் குறித்து எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி, குறித்த பதவி உயர்வு நீதித்துறை செயல்முறையை பாதிக்கக் கூடும் எனவும் எச்சரித்திருந்த நிலையில், உடனடியாக பதவி உயர்வு இரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,எக்னெலிகொட வழக்கில் பிரதிவாதியாக உள்ள மூத்த இராணுவ அதிகாரியொருவர், கடந்த ஜனவரி 16 ஆம் திகதி தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தனக்கு சவப்பெட்டியொன்று தயாராக இருப்பதாக தன்னை மிரட்டியதாகவும் சந்தியா எக்னெலிகொட ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தற்போது அரசியல் பரப்பில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் இது தொடர்பில ஆராய்கின்றது...