இந்திய சீனா உறவில் புதிய ஆரம்பம்
இந்தியாவும் சீனாவும் 5 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் உறவுகளை புதுப்பிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
இதன் ஒருக்கட்டமாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சன் வெய்டோங்கைச் சந்தித்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வானூர்தி சேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதேநேரம், சீன நாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பீய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா விசா
இது, இரண்டு நாட்டு மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்தும் என்றும், இந்த விடயத்தில் சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனா கடந்த 7 மாதங்களில் சுமார் 80 ஆயிரம் இந்தியர்களுக்கு சுற்றுலா விசாவை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இராணுவ மோதல்களில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவும் சீனாவும் பரஸ்பர விசாக்களை நிறுத்தி வைத்திருந்தன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan