லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ள புதிய நடவடிக்கை
புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்திற்கொண்டு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, வெளிநாட்டில் இருந்தவாரே உள்நாட்டு எரிவாயுவை பதிவு (Oder) செய்வதற்கான மென்பொருள் செயலியை (Home Delivery App) லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மென்பொருள் பயன்பாட்டின்படி, வெளிநாட்டில் இருந்தவாரே லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவை அமெரிக்க டொலர்களில் செலுத்தி பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய அம்சம்
இந்த மென்பொருளை கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்துலிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில், லிட்ரோ கேஸ் உள்நாட்டு சந்தையில் 80 சதவீத பங்குகளுடன் முன்னணியில் இருப்பதால், மேம்படுத்தப்பட்ட புதிய அம்சமாக இது நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய மென்பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களை 1311 என்ற லிட்ரோ வாடிக்கையாளர் இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.