கோவிட் தொற்றுக்கு எதிராகப் போராட தேசிய அரச பொறிமுறை அவசியம்! - மயந்த திஸாநாயக்க
இலங்கையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய அரச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"அரசு, தேசிய அரச பொறிமுறை ஒன்றுடன் வரும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும். கொரோனாச் சவாலை எதிர்கொள்வதற்கு அரசு பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
அரசின் எந்தவொரு கட்டமைக்கப்பட்ட கொரோனாத் தடுப்புத் திட்டத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆதரவு வழங்குவார். எனவே, இதனை அரசு கொரோனாத் தடுப்புக்கான வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
இலங்கையில் ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தடுப்பூசிகளேனும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் கொரோனாவை விரைவில் விரட்டியடிக்கலாம்" - என்றார்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri