போதைப்பொருள் மாபியா பின்னணியில் செயற்படும் பொலிஸார்: கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி
போதைப்பொருள் மாபியாவில் தொடர்பிலிருக்கும் பொலிஸார் உடன் வெளியேறுங்கள் அப்படியில்லை என்றால் வெளியேற்றுவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு' இன்று கொழும்பு (2025.10.30) சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

பொலிஸாரை சுத்தப்படுத்தல்
போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதென்றால் முதலில் பொலிஸாரை சுத்தப்படுத்த வேண்டும் என இன்று காலை ஒரு யூடியூப் தொலைகாட்சி ஒன்றில் உரையாற்றிய பெண் ஒருவர் தெரிவிக்கின்றார். உண்மையான கதை.
பொலிஸார் தகவல் வழங்கியதால் உடன் அந்த வீட்டுக்கு போதைப்பொருள் கும்பல் வருவதாக கிராமங்களில் ஒரு நம்பிக்கை உண்டு.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சரும் இதை கட்டுப்படுத்துவதற்கு பாரிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரச தரப்பினர்
பொலிஸார் அதிக பணி நீக்கம் செய்யப்பட்ட யுகமாக எமது ஆட்சி கருதப்படுகின்றது. உங்களின் தொழிலின் நம்பகத்தன்மை மற்றும் சீருடையின் கௌரவம், பதவியின் முக்கியத்துவத்தை பாதுகாத்துக்கொள்ளவும்.
போதைப்பொருள் மாபியாவுக்கு உதவி செய்யும் அனைத்து அரச தரப்புகளும் இதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். இனி யாருக்கும் மறைந்திருக்க முடியாது. அப்படி யாரும் மறைந்திருப்பதாக நினைத்தால், அது அப்படியில்லை.
எமது கண்முன் அனைத்து உண்மைகளும் தெரிகின்றது. அதனால் நாம் அனைவருக்கும் தெரிவிப்பது இதிலிருந்து வெளியேறுங்கள்.
அரசின் கடைசி தீர்மானம்
போதைப்பொருட்களை ஒழிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று, நமது நாட்டை சூழ்ந்து கொண்டிருக்கும் தீய நோயைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஒரு தேசமாக நாம் இந்த தீய கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இது இந்த நேரத்தில் எழுந்த ஒரு சவால் அல்ல. இது பல தசாப்தங்களாக படிப்படியாக வளர்ந்து வருகின்றது. இப்போது அது முழு சமூகத்தையும் மூழ்கடிக்கும் நிலையை எட்டியுள்ளது. என்னைப் போலவே, இந்த கொள்ளை நோயை ஒழிக்க எங்கள் அரசாங்கமும் முடிவு செய்துள்ளது.
இந்த கொள்ளை நோய் எமது குழந்தைகளின் தலைமுறையை மூழ்கடிக்கும் நிலையை எட்டியுள்ளது. சிறையில் உள்ளவர்களில் 64 சதவீதம் பேர் போதைக்கு அடிமையானவர்கள். நாட்டின் எதிர்காலம் அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri