மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ சிப்பாய் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(10) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மல்லாவி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரே காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்குச் சென்று வீட்டிலிருந்து இராணுவ முகாமுக்குச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
