தான் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் தென்னந்தோட்டத்தில் தவிக்கவிட்டு தப்பியோடிய தாய்: விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
குருணாகலில் 5 பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு தாய் ஒருவர் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் 2 - 12 வயதிற்குட்பட்ட 5 பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு தாய் சென்றுள்ளார்.
38 வயதுடைய தாய் தனது காதலனுடன் சென்றுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் 5 பிள்ளைகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் 38 வயதுடைய தாயாருக்கு 35 வயதுடைய நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் பிள்ளைகளை தனியாக விட்டுவிட்டு அவர் சென்றுள்ளார்.
2 பெண் பிள்ளைகளும் 3 ஆண் பிள்ளைகளும் தனியாக விடப்பட்டிருந்த நிலையில் அவர்களை பொலிஸார் அழைத்து சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட பிள்ளைகள் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த பிள்ளைகளின் தந்தை அதிகளவில் மதுபானத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri