நீரில் மூழ்கி பலியான 2 பிள்ளைகளின் தாய்: மரணத்தில் சந்தேகம் வெளியிடும் பொலிஸார்
பதுளை - லுணுகல பகுதியில் நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் கும்புக்கன் ஓயாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லுனுகல, ஜனதபுர, துபாஹிட்டியவத்த பகுதியைச் சேர்ந்த வர்ணசூரிய சுமித்ரா தமயந்தி (வயது 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள கும்புக்கன் ஓயாவில் தாய் நீராடச் சென்றதாகவும், இதன்போது அவரது 17 வயது மகளும் 12 வயது மகனும் வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் மர்மம்
எனினும் அவரது முகம், தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல பற்கள் உடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பெண்ணின் கணவர் நேற்று முதல் வீட்டில் இல்லை எனவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |