சர்ச்சையில் சிக்கிய பிக்கு தொடர்பில் எனது நிலைப்பாடு இதுவே! அம்மாவை பற்றி எழுதாதீர்கள் கண் கலங்கும் பெளத்த துறவி(Video)
ஒரு சில துறவிகளின் தவறான செயல்களை பார்த்து ஒட்டுமொத்த பௌத்த துறவிகளையும் குற்றம் சொல்ல வேண்டாம் என தமிழ் பௌத்தரான பொகவந்தலாவே ராகுல ஹிமி தெரிவித்துள்ளார்.
நவகமுவ பகுதியில் பௌத்த தேரர் ஒருவர் சமூக பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவே ராகுல ஹிமி தனது கருத்துக்களை பதிவிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டார்.
குறித்த காணொளி தொடர்பில் பலர் கருத்து தெரிவித்ததுடன் தவறான பதிவுகளை பதிவிட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“பௌத்த துறவிகள் அன்பு காட்ட கூடியவர்கள். நன்மையை செய்ய கூடியவர்கள். நன்மையை நினைப்பவர்கள். பௌத்த துறவிகளுடன் பழகி பாருங்கள் தெரியும்.
தவறு இழைத்த பிக்கு தொடர்பில் நான் பேசியதற்கு ஏன் எனக்கு தவறான கருத்துக்களை பதிவிடுகின்றீர்கள்? நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நான் இனவாதம் பற்றி பேசினேனா? எதற்காக இப்படி செய்தீர்கள்.”என கூறியுள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய பௌத்த பிக்கு தொடர்பில் அவரது நிலைப்பாடு உட்பட பல விடயங்கள் தொடர்பில் பொகவந்தலாவே ராகுல ஹிமி தேரர் பேசியதை இந்த காணொளியில் காணலாம்,

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
