விரைவில் கொழும்பில் கூடவுள்ள தமிழ் கட்சிகளின் கூட்டம்
தமிழர்களின் அபிலாஷை சமஷ்டி முறையிலான தீர்வுதான் என்பதை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைத்துள்ள கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பில் சம்பந்தனின் வீட்டில் நடைபெறும் எனத் தெரிகின்றது.
முன்னர் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெறாமல் போன இந்த கூட்டத்தை புதிய திகதியில் ஒழுங்கு செய்யும் பொறுப்பு தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வழங்கப்பட்ட பொறுப்பு
அவர் 24ஆம் திகதி இக்கூட்டத்தை நடத்தும் ஒழுங்கு குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் சுமந்திரன், சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என அறியவந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு
இந்தக் கூட்டம் பற்றிய தகவலை அறிவிக்கும் பொறுப்பு எம்.ஏ.சுமந்திரனிடம்
ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அறியவந்தது.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri