இரகசிய உயர்மட்ட சந்திப்புக்கள் இன்று! நாளை தீர்மானமிக்க கூட்டம்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளைய தினம் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கூட்டமாக இது அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்தல் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய இரகசிய சந்திப்புக்கள்

அத்துடன் இன்றைய தினம் பல இரகசிய உயர்மட்ட சந்திப்புக்கள் நடைபெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜே.வி.பியும் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri