இஸ்ரேலால் இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்: ஈரான் சாடல்
மத்திய கிழக்கின் பதற்றத்தின் தாக்கத்தினால் இஸ்ரேல் தமது அமைச்சரவை கூட்டத்தை இரகசியமாக நடத்தியுள்ளதாக ஈரான் சாடியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் குறித்த கூட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஈரான் நாடுகள் மோதல் தற்போது தீவிர நிலை கண்டுள்ளது.
அயோதுல்லா கமேனி
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் திட்டங்களால் ஈரானின் அதிஉச்ச தலைவர் அயோதுல்லா கமேனி(Ayatollah Ali Khamenei) மிகுந்த பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடு மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதனால், இஸ்ரேல் பிரதமருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு
இதன்படி, வழக்கமாக டெல் அவில் நகரிலுள்ள பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ,இரகசியமாக வேறு இடத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக, இஸ்ரேல் அமைச்சர்களுக்கு குருஞ்செய்திகள் வழியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து அவருடைய இடத்திற்கு நயிம் காசீம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri