உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பம் செயலிழப்பு - பல சேவைகள் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப செயலிழந்துள்ளதாக பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை பாதிக்கும் வலுவான தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, அவுஸ்திரேலியாவின் விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன். பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப கோளாறு
தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையை மீட்டெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலை முக்கியமாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளது.
அத்துடன், இதன் காரணமாக லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
