யாழில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
யாழ்ப்பாணத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்டகப்பட்டவர் அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோயிலடியைச் சேர்ந்த இராஜசிங்கம் விக்னேஸ்வரன் என்கின்ற 32 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர், பிறந்தநாள் நிகழ்வொன்றிற்காக வெளியிடத்திற்கு சென்றிருந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத வேளை அங்கு உயிரிழந்தவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam