மட்டக்களப்பில் ஆடுகளை மிருகவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது
மட்டக்களப்பு(Batticaloa) - ஏறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவரை மிருகவதை குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இன்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
செங்கலடியில் இறைச்சிக்காக 3 ஆடுகளை வாங்கி அதனை மரப்பெட்டி ஒன்றில் கட்டி அடைத்துக் கொண்டு மோட்டர் சைக்கிள் ஒன்றில் ஏறாவூருக்கு பயணித்த நிலையில் பொலிஸார் சந்தேக நபரின் மோட்டர்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
சம்பவத்தில், ஏறாவூரைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 ஆடுகளையும் சந்தேகநபர் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam