கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள கட்டடங்கள்
கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்களால் வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு ஆபத்தாக அடையாளம் காணப்படும் அனுமதியற்ற அனைத்து கட்டிடங்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு ஆபத்து
இது தொடர்பான சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உட்பட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் வடிகால்கள் தடைபட்டமையே வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
சட்டவிரோத கட்டுமானங்களை அழிப்பது, ஈர நிலங்களை அழிப்பது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் இயற்றப்பட உள்ளன. அதற்காக அனைத்து அரச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பல்லுயிர் பாதுகாப்பு
ஈர நிலங்களைப் பாதுகாத்தல், அதனுடன் தொடர்புடைய பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழலில் சமநிலையை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முன்மாதிரி நாடாக இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து அறிவையும் சேகரித்து ஒரு திட்டத்தைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.
சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்கு இந்த கொள்கைகளை ஒரு முன்மாதிரி நாடாக செயல்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |