பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முற்பட்ட நபர்
மதுபோதையில் வந்த நபர் ஒருவர் மருதங்கேணியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அதிகாரி ஒருவர் மருதங்கேணி - நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு வீடொன்றில் விசாரணை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சேதமடைந்த மோட்டார் சைக்கிள்
இதன்போது அந்த வழியே மதுபோதையில் வந்த நபர் ஒருவர் வீதியில் நின்ற அதிகாரியின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்க முற்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்ததும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். விரைந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தீயை அணைத்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதி சிறிதளவு சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



