கெஹலிய வெளிநாடு செல்ல அனுமதி: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதியை இன்று (23.11.2023) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழங்கியுள்ளார்.
மீள் விசாரணை
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்திலிருந்து G.I.B ஐ கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சில கடமைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்தார்.
இந்நிலையில் குறித்த அனுமதி வழங்கிய நீதிபதி, அவருக்கு எதிராக ஒதுக்கப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




