யாழில் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(22.07.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மூளாய் வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பரமசாமி சிவலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த நபர் உரும்பிராயில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக உரும்பிராய், வேம்பன் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
