அனுராதபுரத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
அனுராதபுரம்(Anuradhapura) - மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம்(28.05.2024) இடம்பெற்றுள்ளது.
நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர் அவரது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
