நாயாறு கடலில் மூழ்கி மாயமான நபர்
முல்லைத்தீவு (Mullaitivu) - நாயாறு கடலில் குளிக்கச் சென்ற 5 பேரில் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவமானது, நேற்றைய தினம் (28.04.2024) இடம்பெற்றுள்ளது.
நாயாறு கடலில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த 5 பேரில் கொடிகாமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தேடுதல் பணி
இந்நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இருப்பினும், கடற்படையினரின் உதவியுடன் காப்பாற்ற சென்றவர் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, காணாமல் போனவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |