திருகோணமலை - கிண்ணியா பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை(Trincomalee) - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு(14.06.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர், கிண்ணியா இடிமனை சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரான அப்துல் சத்தார் முகம்மது அயாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் அவரது தந்தையுடைய பண்ணைக்கு சென்ற வேளையில் மறைந்திருந்த யானை தாக்கியுள்ளது.

அத்துடன், இப்பகுதியில் இரண்டு வாரத்துக்குள் நான்கு பேர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri