மன்னாரில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது (Photos)
மன்னார் - முருங்கன் பகுதியில் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (01.10.2023)அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 178.75 கிராம் நிறைக் கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட முக்கிய வியாபாரி அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் கடத்தலை மேற்கொண்ட முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய நபர் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
