பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது
குருநாகல்(Kurunagala) - நாகொல்லாகம பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(13.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இலஞ்சம் வழங்க முயற்சி
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிக்க 50,000 ரூபா, இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹிரியால, அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் 20 மற்றும் 28 வயதுடைய, அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சந்தேகநபர்கள் மூவரும் இன்று(14) மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
