யாழில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திய ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த லொறி ஒன்றினை யாழ். பொலிஸார் கைப்பற்றியதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (03.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
நெடுந்தீவில் இருந்து 20 மாடுகள் முறையான அளவு பரிமாணங்களின்றி சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் நோக்கி லொறியில் கொண்டுவரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து லொறியிலிருந்து 10 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ். பண்ணை பகுதியில் 10 மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவில் குறிகாட்டுவான் வரை படகிலும் பின்னர் லொறிமூலம் மாடுகளை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |