கடற்படையினரிடம் சிக்கிய பெருமளவு போதைப் பொருட்கள்
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இழுப்பைக்கடவை தடாகத்தில் இலங்கை கடற்படையினர், மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் ஆகும்.
குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் அருகில் உள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகத்திற்கிடமான மூட்டைகளை மீட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை போதைப் பொருட்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் கடற்பரப்பில் தொடர்ந்தும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
