தமிழர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சடலமாக மீட்பு (photos)
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01.04.2023) பதிவாகியுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை காரணமாக இவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (02.04.2023) பதிவாகியுள்ளது.
பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: எரிமலை

