நாடளாவிய ரீதியில் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள்
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்தது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும்,உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
பௌதீக விஞ்ஞானப்பிரிவில் ஞானமூர்த்தி சூர்யா என்ற மாணவனும்,உயிர்முறை தொழில்நுட்ப பிரிவில் கிருபாகரன் ஹரிகரன் என்ற மாணவனும் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் எட்டு மாணவர்கள் 3A சித்திகளை பெற்றுள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
செய்தி:தீபன்
வவுனியா
வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளனர்.
விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை பெற்று சி.கஞானன் மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும், பீ.டெக் பிரிவில் 2A ,B சித்திகளை பெற்று யு.கிங்சிலி மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேலும், வெளியான முடிவுகளின் அடிப்படையில் பிரிவுகள் ரீதியாக முதல் 10 நிலைகளுக்குள் தெரிவாகிய மாணவர்களின் விபரத்தினை பாடசாலை அதிபர் வெளியிட்டுள்ளார்.
செய்தி:திலிபன்
வவுனியா
செட்டிகுளம்-கரப்பைமடு எனும் கிராமத்தில் வசித்து வரும் நந்தகுமார் விதுர்ஷன் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன், செட்டிக்குளம் மகாவித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்ற முதல் மாணவன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
செய்தி:தீலிபன்
வவுனியா
வவுனியா-நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் ராஜ்குமார் சுலோஜன் கணிதப் பிரிவில் முதல்நிலை பெற்றுள்ளார்.
3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 75வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
மேலும், உயிரியல் பிரிவில் நிகருண்யா திருமூர்த்தி A 2B சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 22வது இடத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன் வர்த்தக பிரிவில் யசிந்தா யேசுதாசன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 15வது இடத்தினையும் வத்ஷனா ராஜரட்ணம் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 18வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன், ஏனைய மாணவர்கள் திறமைச் சித்திகளை பெற்றுள்ளனர்.
செய்தி:தீலிபன்
வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள்.
மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் வருமாறு
பௌதீக விஞ்ஞான பிரிவு
சி.ஜெயகாந் 3A, C
விதுர்சன் 3A
யோ.கீர்த்தி 2A B
யோ.துவாரகன் A 2B
ப.பவநிதன் 2A B
நீ.அருள்தாஸ் 2A B
ஜ.தனுவேந்தன் 2B C
ஜெ.சங்கீர்த்தனன்B 2C
தெ.சர்மிகன் B 2C
இ.பவித்திரா 2B C
க.குகவேழினி 3C
சி. கிரோஸிகா 3C
க.தர்சிஷிகா B C S
வ.நிரோஜன் B 2 C
தே.ஜனோஜனன் B C S
உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு
ச.கம்ஷா A B C
த. ஜதுயா B 2C
க.நாகஜோதி 3C
மோ. விதுஷா B 2C
இயந்திரவியல் தொழில்நுட்பம்
நா.தர்மிகன் A 2B
விஞ்ஞானப் பிரிவு
அ.வெற்றிதரன் 2A B
க.தர்ஷிகா A B C
க.மதுசா 2B C
கு பிரியங்கா B 2C
ஏ.சங்குசன் B 2C
பா.பவசாந் B 2C
கலைப்பிரிவு
து.புவிதா 3A
க.பிரணவன் 2A B
ஜெ.நிரஞ்சனா A 2B
கு.விதுஷா 2A B
சி.நிஷாந்தினி A 2B
தம.திலக்சி A 2B
கி.கனிஸ்ரிகா A B C
வணிகப்பிரிவு
இ.கிருஷ்ணராஜா 3A
வே.கஜானி A B C
செய்தி:கஜிந்திரன்
வவுனியா
வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பல மாணவிகள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் பலர் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர்.
அதன் அடிப்டையில் வணிககப்பிரிவில் தெய்வகுமார் தனுஷ்கா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும், சுவேந்திரராசா டர்மிகா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும், பரமேஸ்வரன் வித்தகி 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8 இடத்தினையும், ஜெயபிரகாஸ் யதுசா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13இடத்தினையும், பாஸ்கரன் லிருசிகா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன், கலைப்பிரிவில் போஜராஜன் றீவா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும், வரதராஜன் பவித்திரா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும், சண்முகலிங்கம் சிவேதா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13இடத்தினையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் தொழிநுட்பம் பிரிவில் பாஸ்கரன் சுகன்யா 3பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும், புஸ்பதேவன் றோகிதா பி,2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் ஜோன்சன் செரின் 3 சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும், சந்திரசேகர் யுவேந்தினிகா பி,சி,எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும், விஞ்ஞானப்பிரிவில் கலைச்செல்வன் டிலக்சா 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 12வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.
செய்தி:தீலிபன்
மட்டக்களப்பு
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த(உ.தர)ப் பரீட்சை 2021(2022) முடிவுகளின்படி மட். பட்.களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 209 மாணவர்களில் 160 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் விஞ்ஞானப்பிரிவில் 17 மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் 19 மாணவர்களும், கலைப்பிரிவில் 62 மாணவர்களும், பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் 30 மாணவர்களும், உயிர்முறைமைகள் தொழிநுட்பப்பிரிவில் 32 மாணவர்களும் அடங்குகின்றன.
இதில் பொறியியல் பீடத்திற்கு தங்கவடிவேல் மிருணா மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 3 ஆம் நிலையினையும், சதீஸ்பிரதாஸ் திகாஜினி உயிர்முறைமைகள் தொழிநுட்பப் பிரிவில் 2ஏ பி யினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் நிலையினையும் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
செய்தி -ருசாத்



