உயர்தர பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலாம் இடத்தினைப்பெற்று மாணவி சாதனை (VIDEO)
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் கலைப்பிரிவில் யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கலைப்பிரிவில் 3 ஏ திறமை சித்திகளைக்பெற்று முதலிடத்தையும்,அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையையும் பெற்றுள்ளார்.
மாணவி எதிர்நோக்கிய சவால்கள்
மாற்றுத் திறனாளியான குறித்த மாணவி உயர்தர கல்வியின் போது சுன்னாகம் வாழ்வகத்தில் தங்கி இருந்து தனது கல்வியை மேற்கொண்டு இந்த வெற்றியினை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி தனது ஆரம்பக் கல்வியை கொட்டடி நமசிவாயம் பாடசாலையிலும், உயர்கல்வியை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும் பயின்றுள்ளார்.
இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி தாயாரின் அரவணைப்பில் பல கஷ்டங்களின் மத்தியில் கல்வியினை பயின்று இவ்வாறு யாழ்.மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
