யாழில் உருவாகும் பிரமாண்டத் தேர்: பிரமிக்க வைக்கும் தமிழனின் படைப்பு
இந்துக்களின் முக்கிய கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மகோற்சவங்கள் மற்றும் திருவிழாக்களில் தேர் வீதி உலா என்பது முக்கிய அம்சமாக அமையப்பெறுகிறது.
இறைவனின் தரிசனத்தை காணும் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக தேர் திருவிழா அமையப்பெறுகிறது.
வீதி உலா வரும் தேர்கள் பல்வேறு அம்சங்களுடனும், பிரமிக்கவைக்கும் சிற்பக்கலைகளுடனும் வடிவமைக்கப்படுவது ஆச்சர்யமூட்டும் விடயமாகும்.
இவ்வாறான ஒரு படைப்ப்பானது எமது தமிழர் தாயகத்திலும் அமையப்பெறுவது பாராட்டத்தக்க ஒன்றே.
யாழ். சங்கானை பகுதியில் ஆலய திருவிழாக்களில் பயன்படும் தேரானது தமிழர் ஒருவரால் வடிவமைக்கப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் சிற்ப அமைப்புக்களும், வடிவமைப்புக்களும் அவரின் கலைத்திறனை பறைசாற்றும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வியக்க வைக்கும் இந்த தமிழனின் படைப்பு தொடர்பிலும், கலை திறன் தொடர்பிலும் பல்வேறு விடயங்களை தொகுத்து வருகிறது கீழுள்ள காணொளி ஆவணம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |