கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில்(Kilinochchi) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று (30.04.2024) காலை 10.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேசத்திடம் கோரிக்கை
குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“தமது உறவுகள் தங்களுடன் கொஞ்ச காலம் என்றாலும் வாழ வேண்டும் என்று தொடர்ச்சியாக தாம் போராடி வருகின்றோம்.

தமது போராட்டத்தை இதுவரையில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம்.
குறித்த போராட்டம் ஆயிரக்கணக்கான பேருடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்பொழுது நலிவடைந்து போய் பல தாய்மாறின் உயிர்கள் பறிபோனது மட்டுமே மிகுதி” என தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam