மன்னாரில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட வீடு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடு இன்றைய தினம் சனிக்கிழமை (12.10.2024) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 10ஆவது கெமுனு கோவா படைப் பிரிவினால் அமைக்கப்பட்ட குறித்த வீடு தள்ளாடி 54ஆவது படைப்பிரிவு கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.பி.ஏ.ஆர்.பி ராஜபக்ச தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
மர நடுகை
இதன்போது, குறித்த வீட்டை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பி.சி.பீரிஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்து குறித்த குடும்பத்திடம் கையளித்தார்.

மேலும், வீட்டு வளாகத்தில் மர நடுகை இடம்பெற்றதோடு குறித்த குடும்பத்திற்கு இராணுவத்தினால் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri