கொழும்பில் தேவாலயமொன்றில் வைக்கப்பட்ட கைக்குண்டு! - பிரதான சந்தேகநபர் கைது (Video)
பொரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் கடவத்தை, பியன்வல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடையவராவார்.
கடந்த 11ம் திகதி பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த தேவாலயத்துடன் நீண்டகாலமாக தொடர்பு கொண்டிருந்த மருதானையை சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவை உள்ளிட்ட கொழும்பு தொலைகாட்சிகளில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை இந்த பதிவில் காணலாம்.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri