கொழும்பு - வெள்ளவத்தையில் திறந்து வைக்கப்பட்ட MNL தொடர்மாடி குடியிருப்பு
கொழும்பு வெள்ளவத்தையில் 'MNL' (My Next Level Private Limited) தனியார் கட்டுமான நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள ஆல்ப்ஸ் குடியிருப்பினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17.06.2024) நடைபெற்றுள்ளது.
மங்கள விளக்கேற்றல்
இந்நிகழ்வில், குறித்த கட்டுமான நிறுவனம் இலங்கையில் தனது கால்தடத்தை பதிக்க ஏதுவாக இருந்த நபர்கள் மங்கள விளக்கேற்றுவதற்காக விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
'MNL' நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முருகேஷு சிவஞானசுந்தரம், நிர்வாக இயக்குநர் யுகவேந்திரன் சிவஞானசுந்தரம், ராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் மற்றும் சதுர்ஷன் சிவஞானசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் மற்றும் சிறப்பு விருந்தினராக சந்திரசேன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
காணொளி விளக்கக்காட்சி
மேலும், விருந்தினர்களாக லங்காசிறி குழுமத்தின் முகாமையாளர் பாஸ்கரன் மஹாமணி மற்றும் கட்டுமான ஆலோசகர் டி. பஷீல் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முருகேஷு சிவஞானசுந்தரம் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
அதேவேளை, ஆல்ப்ஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், சுற்றுச்சூழல், உடற்பயிற்சி நிலையம் மற்றும் நவீன பாதுகாப்பு முறை தொடர்பான காணொளி விளக்கக்காட்சி ஒன்றும் இதன்போது காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |