நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
அனுராதபுரம் - மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இன்று (18ஆம் திகதி) முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பொசன் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
வெளியூர்களில் இருந்து விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் தேசிய பொசன் விழாக் குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய அந்தப் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
