கோடிக்கணக்கில் வரி செலுத்தாதிருக்கும் இலங்கை செல்வந்தர்கள்! நாடாளுமன்றில் அம்பலம்
கோடிக்கணக்கில் வரி செலுத்தாதிருக்கும் பெரும் செல்வந்தர்களைப் பாதுகாத்துக் கொண்டு மக்களுக்கு ஏன் வரிச் சுமையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் வரிக்கொள்கை தொடர்பில் இன்றையதினம்(18.06.2024) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரி அறவீட்டு
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
"தற்போது வரி வலையில் இல்லாத குழுக்களை குறித்த வலைக்குட்படுத்துவதன் மூலம், வரி அறவீட்டு முறையை மிகவும் திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், வரி நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பது சிறந்த நடவடிக்கையாக அமையும்.
யார் ஆட்சியில் இருந்தாலும், வரி நிர்வாகம் வெளிப்படையாகவும், பொறுப்புடனும், செயல்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், டிஜிட்டல் மயமாக்கலுக்கு எதிரான பிரிவினரும் இருந்து வருகின்றனர்.
வங்குரோத்தான நாட்டிற்கு வரி விதித்து, வரி சுனாமியை உருவாக்குவதற்குப் பதிலாக, வரி நிர்வாகத்தை திறம்படச் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஒத்துழைப்பை நல்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வரி வலையில் சிக்க வேண்டிய நிலையில் இதுவரை வரி வலையில் உள்ளடக்கப்படாத குழுக்களை உள்ளடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |