முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் அரசு : ரணிலுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்காலத்தில் ரணில் ஜனாதிபதியாக வருவாராக இருந்தால் குறிக்கப்பட்ட விடயங்களுக்கு அவர் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் அதற்கான பலனையும் அவர் அனுபவிப்பார் என சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(14.05.2024) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்களத்தரப்பில் ஒரு தமிழரை ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ கொண்டுவருவதற்கு அவர்கள் எந்தவொரு காலக்கட்டத்திலும் ஒப்புதல் அளிக்கமாட்டார்கள் என்பது வெளிப்படையான விடயம்.
மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சியினை வழங்கிய பெண்கள் மிக மோசமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்க எந்த முகாந்தரமும் கிடையாது.
நீபதியால் அதற்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. என்னை பொறுத்தவரையில் இது ஒரு அநாரிகமான செயற்பாடாகும். இவ்வாறான விடயங்களுக்காக பொலிஸார் நீதிமன்றத்தை நோக்கிச் செல்வது என்பது கொடுமையானது. இவ்வறான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது ஜனாதிபதியின் முடிவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
