இலங்கையின் கடற்கரைக்கு வந்த இராட்சத சுறா (Photos)
நாவக்காடு கடற்கரைக்கு வந்த பாரிய சுறா கடற்படையின் உதவியுடன் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.
மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு வந்த சுறா, விரைவு கப்பல் மூலம் மீண்டும் கடலுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்..
4000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட சுமர் 38 அடி நீளமான வெள்ளை சுறா நேற்றைய தினம் கடற்கரையை அடைந்திருந்தது.

வலையின் உரிமையாளர்கள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் குழுவினர் இந்த சுறாவை கடலுக்கு அனுப்ப முயன்றும் முடியவில்லை.
நுரைச்சோலை பொலிஸாரும் இலந்தடிய வனவிலங்கு அதிகாரி அலுவலகமும் கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து நீர் ஜெட் படகு மூலம் சுறாவை கடலுக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.
சுமார் மூன்று மணித்தியால முயற்சிக்கு பின்னர் சுறாவை கடலுக்கு கொண்டு செல்ல முடிந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri