நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை: மதுவினால் வந்த வினை
வவுனியா- கல்மடு, ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (10.07.2023) இடம்பெற்றுள்ளது.
மதுபானம் அருந்திய போது நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்
வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகநபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தின் பின் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி பின்னர் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |