தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிங் பொங் விளையாட்டு கழக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருடந்தோறும் நடாத்திவரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் 2024ஆம் ஆண்டிற்க்கான போட்டியின் இறுதி போட்டி நேற்று இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு விளையாட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கள சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
மங்கள சுடர்களினை நாடாளுமன்ற உறுப்பினரும், நிகழ்வின் பிரதம விருந்தினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஏம். ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், அம்பன் பிள்ளையார் முருகன் ஆலய பிரதம குரு, உட்பட பலரும் ஏற்றிவைத்ததுடன் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகம், மற்றும் மணல்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டு கழகங்கள் மோதிக் கொண்டன.
22 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவி
இதில் மணல்காடு சென் அன்ரனீஸ் அணி வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதேவேளை 22 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் குடத்தனை உதய சூரியன் விளையாட்டு கழகமும், அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன.
இதில் அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. அத்துடன் 22 வயதிற்க்கு மேற்பட்டோர் பிரிவில் வெற்றிபெற்ற மணல்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டு கழகமும், போட்டிகளை நடாத்திய அம்பன் பிங்கொங் விளையாட்டு கழகத்தின் 22 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவிற்க்கும் இடையில் சவால் கிண்ண போட்டி இடம் பெற்றது.
இதிலும் அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.
இப்போட்டியில் இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கழகங்கள், அம்பன் பிங் பொங் விளையாட்டு கழக வீரர்கள், கராம மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் வெற்றி பெற்ற கழகங்களிற்க்கான பரிசில்கள் கேடயங்கள் பணப்பரிசில்களையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உட்பட்ட விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |