கடலில் மீன் பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் கடலில் விழுந்து பலி
மன்னார் - செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்ச சென்ற இளம் குடும்பஸ்தரான கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மன்னார் - எமில் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிரிஸ்தோபர் ஜாக்லின்(29) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் (13) மதியம் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் கடல் தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்ற கடல் தொழிலாளர்களினால் குறித்த கடற்தொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
