பாலைவனத்தில் 40 ஆண்டுகளாக எரிந்துகொண்டிருக்கும் தீ! குழப்பத்தில் நிலவியலாளர்கள்
பாலைவனத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் பல தசாப்தங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க துர்க்மெனிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
"கேட்வே டு ஹெல்" அல்லது "நரகத்தின் வாயில்" என்று அழைக்கப்படும் இந்த தீ சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும்,மேலும் சுகாதாரக் காரணங்களுக்காகவும், நாட்டின் எரிவாயு ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடனும் தீயை அணைக்க அதிபர் குர்பாங்குலி பெர்டிமுகாமேதோவ் உத்தரவிட்டுள்ளார்.
1971-ஆம் ஆண்டு சோவியத் அரசின் எண்ணெய் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட தவறால் இந்தப் பள்ளம் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகின்றது.
சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவித்தாலும், இந்த பள்ளம் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
"நகரத்தின் நுழைவாயில்" தீயை அணைக்க இதற்கு முன்பும் பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
2010-ஆம் ஆண்டிலும் தீயை அணைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்குமாறு நிபுணர்களுக்கு அதிபர் பெர்டிமுகாமேதோவ் உத்தரவிட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலன் தரவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, 2018ஆம் ஆண்டில், அந்தப் பள்ளத்துக்கு "காராகும்மின் பிரகாசம்" என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிட்டுள்ளார்.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri