மாத்தறையில் வாகன விபத்து: குடும்பஸ்தர் பலி
மாத்தறை, திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை - கதிர்காமம் வீதியில் மாலியத்த பிரதேசத்தில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திக்வெல்லவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த மாடு ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை
இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan