களுத்துறையில் மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிப் படுகொலை
களுத்துறை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08.09.2023) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை - தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை சேறுபிட கொழும்பகே வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்த நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடி பார்த்த போது அயல் வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலி் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை மறுநாள் மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொலைச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
