பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: சிறீதரனிடம் வலியுறுத்து
வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் சிறீதரனின் முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசிய அரசியல்
“தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன்முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமைக்கான தெரிவென்பது கடந்தவாரம் நடைபெற்றது.

இந்த ஜனநாயகப் பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டுமென அவாவுகிறோம்.
இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல்மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் சிறீதரனின் முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன.

மேலும், இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாக இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சியொன்றின் தலைமைத்துவம் என்ற வகையில் அவரும் அவர் சார்ந்த கட்சியினரும் அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        