நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெற வேண்டும்: கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து

Batticaloa Sri Lanka Politician Sri Lanka
By Bavan Jan 27, 2024 05:24 PM GMT
Report

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பவற்றை மீளப்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (27.01.2024) கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடகவியலாளர்களால் ஊடக அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரன் இல்லாத சுமந்திரனின் எதிர்காலம்

சிறீதரன் இல்லாத சுமந்திரனின் எதிர்காலம்

நிகழ்நிலை காப்பு சட்டம்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “1979 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக 6 மாதத்திற்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டம் இன்று வரை தொடர்ச்சியாக இருக்கின்றது.

இந்த நிலையில் ஊடகங்களையும் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்காக இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.


இந்த சட்டத்திற்கு வடகிழக்கு சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட கை உயர்த்தி ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்காக தான் இச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதோ என்ற சந்தேகங்கள் எழுகின்றது.

ஏனென்றால் நில அபகரிப்புகள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வடக்கு கிழக்கிலே கூடுதலாக நடக்கின்றது.

2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின் ஒரு மௌன யுத்தம் வடக்கு கிழக்கை பௌத்த மதமாக்குவது காணி அபகரிப்பதற்கு பெரும்பான்மையான மக்களை குடியேற்றி எமது இன பரம்பலை குறைப்பதுமாக அரசும் அரச அதிகாரிகளும் புத்த பிக்குகள் கூட இந்த நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெற வேண்டும்: கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து | Batticaloa Press Meet Govindan Karunakaram

இப்படியான காலகட்டங்களில் வடக்கு கிழக்கிலே மக்கள் கிளர்ந்து எழக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது.

அதற்கு மேலாக இந்நாட்டின் அரகலய போராட்டம் என்ற போராட்டங்கள் கூட இனி ஏற்படக் கூடாது எனவும் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து கூறக்கூடாது என்று அரசு நினைக்கின்றது.

ஒன்றை மட்டும் இந்த அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று இருக்கும் அரசு நாளை மாறலாம் நாளை மாறும் போது தனக்கு சாதகமாக தற்போது இருக்கும் அரசு அங்கத்துவம் பெறுபவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் கை உயர்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்கள் கூட இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இச்சட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணராமல் அவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெற வேண்டும்: கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து | Batticaloa Press Meet Govindan Karunakaram

கடந்த காலங்களிலே ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டும் ஊடக கலையகங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டடு வரலாறுகள் இருக்கின்றதுடன் 30க்கும் 40க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

யாருக்குமே இன்று வரை நீதி கிடைக்கவில்லை நீதி கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்க முடியாது.

பயங்கரவாத தடை சட்டம்

2009 தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் கூட இன்னும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கான நீதியை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இந்த நீதியைக் கூட கொடுக்காத அரசு இப்படியானவர்களுக்கு நீதி கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

இருந்தாலும் இன்னும் ஒரு கருத்தும் இருக்கின்றது ஊடகங்களை ஒழுங்கு படுத்தக்கூடிய ஒரு தேவையும் இருக்கின்றது.

தற்போது ஊடகங்களுக்கு அப்பால் சமூக சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக சில பாதிப்புகளும் மக்களுக்கு நடக்கின்றது.

குறிப்பாக சிலர் தற்கொலை செய்வதற்கும் இந்த முகநூல் மூலமாக போலி முகநூல் மூலமாக சில பிரச்சாரங்கள் செய்யப்படுவதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெற வேண்டும்: கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து | Batticaloa Press Meet Govindan Karunakaram

இருந்தபோதும் அதை விடுத்து ஊடகங்களை அடக்கி தனக்கு எதிரான கருத்துக்களை யாருமே கூறக்கூடாது என்ற ஒரு நிலையில் தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வருகின்றது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு எதிராக 56 அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே சர்வதேசத்தின் கவனம் இலங்கை அரசு மீது திரும்பி இருக்கின்றது. ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெற வேண்டும்: கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து | Batticaloa Press Meet Govindan Karunakaram

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசு சிந்திக்கின்றது.

எங்களை பொருத்தமட்டிலே பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம் ஊடகங்களை அடக்கும் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வேண்டாம் என்பதை எங்களுடைய உறுதியான நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா : மகளையே உற்று நோக்கிய இளையராஜா

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா : மகளையே உற்று நோக்கிய இளையராஜா

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா : மகளையே உற்று நோக்கிய இளையராஜா

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா : மகளையே உற்று நோக்கிய இளையராஜா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US